Sunday, December 27, 2009

விலை பேசியது உங்களை மட்டும்தானா..?

ஐஸ்வர்யா ராய்,
சுஷ்மிதா சென்,
டயானா ஹய்டன்,
லாரா தத்தா ,
பிரியங்கா சோப்ரா ,

உலக அழகிகளே .....!
பிரபஞ்ச நாயகிகளே.... !

உங்களுக்கு சூட்டப்பட்டது
வெற்றி கிரீடங்கள் அல்ல...
பெண் இனத்தின் மீது
சூட்டப்பட்ட முள் கிரீடங்கள்...

ஆணாதிக்க கழுகுகளின்
ச(ந்)தை பசிக்கு
இரையாகிப்போன
அழகிகளே...!

நீங்கள் மகுடம் சூடியது
சரித்திரமும் அல்ல ,
சாதனையும் அல்ல...

விளம்பரக் கலாசாரத்துள்
உணர்வு மக்கி,
அறிவு அழிந்து ,
வீணாகி போக ,
எதிர்காலத்தை விலை பேசி விட்டீர்களே...

நீங்கள் - விலை பேசியது
உங்களை மட்டும் அல்ல,
பெண் இனத்தின்
எதிர்காலத்தையும் சேர்த்துதான்...

No comments:

Post a Comment