Sunday, December 27, 2009

சுகமான சுமை

குழந்தை மட்டுமல்ல

பெற்றோரும் தான்

வயதானதால் அல்ல

வலியால்

பக்குவப்பட்டேன்

வாட்டியது வாடைமட்டுமல்ல
விடுமுறையின் வரவும் தான்

வீட்டுக்குள் மழை

கப்பல் விடுவதா

கவலைப் படுவதா

வீட்டுக்குள் மழை
கப்பல் விடுவதா
கவலைப் படுவதா
கணினி,
இணையம்,
இளைய தலைமுறை
சந்தோஷங்கள் என்று நினைப்பதுண்டு...

இன்றோ
வெளிநாட்டில் மகன்
கணினியும்,
இணையமும்,
அவனிடத்து என்னை
நாளும் கூட்டி செல்கின்றன,

இன்று நினைக்கிறேன்,
கணினி,
இணையம்,
மூத்த தலைமுறையின்
சந்தோஷம் மட்டுமல்ல,
உயிர் மூச்சும் கூட...

மாமியார் மருமகள் உறவு...

உறவு பகையன்று

உணர்வு பகையே...

' மாமியார் '
சொல்லை அகராதியிலிருந்து
எடுக்க விரும்புகிறேன்
நீ
அடிக்கொடல்லவா இடுகிறாய்..
மருமகளே
உனக்கும்
எனக்குமான
இடைவெளி
இன்று நேற்றல்ல
யுகமாய் தொடர்கிறது
இரட்டு நிரப்ப நான் தயார்,
நீ...?


பெண்ணே,
புரிந்துகொள்!
என் மகன்தான்
உன் கணவன்,
நீ நினைப்பது போல்
உன் கணவன்
என் மகன் அல்ல...

விலை பேசியது உங்களை மட்டும்தானா..?

ஐஸ்வர்யா ராய்,
சுஷ்மிதா சென்,
டயானா ஹய்டன்,
லாரா தத்தா ,
பிரியங்கா சோப்ரா ,

உலக அழகிகளே .....!
பிரபஞ்ச நாயகிகளே.... !

உங்களுக்கு சூட்டப்பட்டது
வெற்றி கிரீடங்கள் அல்ல...
பெண் இனத்தின் மீது
சூட்டப்பட்ட முள் கிரீடங்கள்...

ஆணாதிக்க கழுகுகளின்
ச(ந்)தை பசிக்கு
இரையாகிப்போன
அழகிகளே...!

நீங்கள் மகுடம் சூடியது
சரித்திரமும் அல்ல ,
சாதனையும் அல்ல...

விளம்பரக் கலாசாரத்துள்
உணர்வு மக்கி,
அறிவு அழிந்து ,
வீணாகி போக ,
எதிர்காலத்தை விலை பேசி விட்டீர்களே...

நீங்கள் - விலை பேசியது
உங்களை மட்டும் அல்ல,
பெண் இனத்தின்
எதிர்காலத்தையும் சேர்த்துதான்...